Home Latest News Tamil கோயிலுக்குப் போவேன்: ஐயப்பனை வணங்க அவசியமில்லை – கனக துர்கா

கோயிலுக்குப் போவேன்: ஐயப்பனை வணங்க அவசியமில்லை – கனக துர்கா

468
0
கோயிலுக்குப் போவேன்

கோயிலுக்குப் போவேன்: ஐயப்பனை வணங்க அவசியமில்லை – கனக துர்கா

கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கனகதுர்கா, சிந்து ஆகியோர் நுழைந்தனர்.

முதல் முறை கோவிலுக்குள் நுழைய முயன்றபோதே வீடு திரும்பும்படி கனக துர்காவின் கணவர் போனில் எச்சரித்துள்ளார்.

ஆனால், கணவரின் பேச்சை மீறி சென்றது மட்டுமல்லாமல் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்.

மீண்டும் வீடு திரும்பியவுடன் கனதுர்காவின் மாமியார் உருட்டுக்கட்டையால் கனக துர்காவை வெளுத்துள்ளார்.

இதனால் கனகதுர்கா வீடு இல்லாமல் அரசு விடுதியில் வசித்துவருகிறார். அவருடைய தம்பி கனகதுர்காவிற்கு அதரவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் மீடியாக்களுக்கு பேட்டியளித்தார், நான் ஐயப்பன் கோவிலுக்குள் சென்றதற்காக யாரிடமும் மன்னிப்புக்கேட்க மாட்டேன்.

என்னுடைய தம்பியும் பாஜகவினரிடம் மன்னிப்புக்கேட்கவில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனக் கூறினார்.

மேலும், உங்களுடைய பிரச்சனை தீர ஐயப்பனிடம் ப்ராத்தனை செய்தீர்களா? எனக் கேட்டதற்கு, தனிப்பட்ட காரணத்திற்காக ஐயப்பனை வணங்கமாட்டேன்.

பாலின ரீதியிலான வழிபாட்டை களையவே நான் கோவிலுக்குள் நுழைந்தேன் எனக் கூறினார்.

Previous articleசிம்புவை சசிகலா கடத்த முயன்றார்: வீட்டிக்குள் முடங்கிய சிம்பு
Next articleவாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா: மூன்றுக்கும் முடிச்சிப்போட மார்க் திட்டம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here