Home Latest News Tamil பெய்ட்டி புயல், பெத்தாய் புயல்: குழப்புவது யார்?

பெய்ட்டி புயல், பெத்தாய் புயல்: குழப்புவது யார்?

1011
0
பெய்ட்டி புயல், பெத்தாய் புயல்

பெய்ட்டி புயல், பெத்தாய் புயல்: மக்களைக் குழப்புவது யார்?

புயல்களை கணிப்பது என்பதே பெரும் குழப்பம். வானிலை வல்லுனர்களே, புயல் சரியாகக் கரையைக்கடக்கும்  இடத்தை, கடைசி நிமிடத்தில்தான் உறுதி செய்கின்றனர்.

தற்பொழுது, புயலுக்கு வைத்த பெயரை உச்சரிப்பதில் கூட மக்களைக் குழப்புகின்றனர். ஒருவர் பெத்தாய் புயல் என்கின்றார். இன்னொருவர் பெய்ட்டி புயல் எனப் பேட்டி கொடுக்கின்றார்.

தாய்லாந்து நாடு, புயலுக்கு வைத்த பெயர் பெத்தாய் புயல் (Phethai Cyclone). Phethai, இந்த வார்த்தையின் உச்சரிப்பு பேத்தாய் அல்லது பெத்தாய். ஆனால், தமிழக வானிலை மையம் புதிதாக ஒரு பெயரை சூட்டியுள்ளது.

இந்திய வானிலை மையம் Phethai cyclone என உறுதி செய்துள்ளது. விக்கிபீடியா அதே பெயரை உறுதி செய்துள்ளது. கூகுள் அதே பெயரை உறுதி செய்துள்ளது. ஆனால் தமிழக வானிலை அதிகாரிகள் சிலர் மட்டும் பெய்ட்டி எனக்கூறியுள்ளனர்.

piety என்றால் பக்தி என்று அர்த்தம். piety puyal என அறிவித்தவர் மிகவும் பக்திமானாக இருக்கலாம். பெய்ட்டி என்ற வார்த்தை, லத்தின் மொழியைச் சேர்ந்தது. அதை எப்படி தாய்லாந்து பயன்படுத்தியது எனத்தெரியவில்லை.

ஒரு பெயரையே தவறாக உச்சரிப்பவர்களின் வானிலை அறிக்கை சரியாக இருக்குமா? யார், புயலைப் பற்றி முதலில் கணித்துச் சொல்வது என்ற அதிகாரப் போட்டியில், புயலின் பெயரையே தவறாக உச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, சென்னைக்கு அருகில் இருந்த பெத்தாய் புயல், ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரை நோக்கி இடம் பெயர்ந்துகொண்டு உள்ளது. தமிழகத்திற்கு இந்தப் புயலால் எவ்விதப் பாதிப்பும் இல்லை.

Previous articleMovie Review Thuppakki Munai | துப்பாக்கி முனை
Next articleஷாடன் ப்ரைவ்டா: உங்களுக்கும் இந்த நோய் உண்டு! 
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here