அழிக்கப்பட்ட 1000 வீடியோக்களை மீட்டுவிட்டது சிபிஐ; முக்கியப்புள்ளி சிக்குகிறார்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கும்பல் செய்த செயலால் தமிழகமே கொந்தளித்து உள்ளது.
அவர்களைத் தோண்டத்தோண்ட பல பெண்களின் வாழ்க்கை சிரழிக்கப்பட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு தற்பொழுது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிஐயின் முதல் நடவடிக்கையாக திருநாவுக்கரசு செல்போன், லேப்டாப்களில் அழிக்கப்பட்ட வீடியோக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.
அப்படி மீட்கப்பட்டு உள்ள வீடியோக்களில் முக்கிய புள்ளி ஒருவரின் வீடியோவும் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிபிஐ நேர்மையாக விசாரணை செய்தால் நிச்சயம் முக்கியப்புள்ளி சிக்கிக்கொள்வார் என போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.