ஐபிஎல் டிக்கெட் விற்பனை: விடிய விடிய தூங்காத ரசிகர்கள்
இன்று காலை 11 மணிக்கு ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. இதற்காக நேற்று இரவில் இருந்தே தூங்காமல் விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்.
ஐபிஎல் 2019-ஆம் ஆண்டின் முதல்போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகளை வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த வருடம் ஐபிஎல் தொடக்க விழா கிடையாது. அதற்கு ஆகும் பணத்தை புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
வருகிற 23-ஆம் தேதி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோலி தலைமையிலான ராயல் சேலஞ் பெங்களூர் அணியும் மோதவிருக்கின்றன.
ஏப்ரல் 5-ம் தேதிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் தங்கள் சொந்த ஊர்களில் விளையாட உள்ளனர்.
அதேபோல சென்னையில் நடக்கும் இரண்டாவது போட்டி வருகின்ற 31-ம் தேதி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
விரைவில் மற்ற போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த வருடமும் இல்லாத அதிகமான ப்ரோமோ விளம்பரங்கள் இந்த வருடம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.
கடந்த வருடம் காவேரி பிரச்சனையால் சென்னை மைதானத்தில் போட்டிகள் எதுவும் நடக்காத காரணத்தினால் இந்த வருடம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் ஆனது.