Home ஆன்மிகம் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை

538
0
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பிரகதீஸ்வரர் ஆலயம் குடமுழுக்குகு நேரலை

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை. பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரலை காணலாம். பிரகதீஸ்வரர் ஆலயம் குடமுழுக்கு

பிரகதீஸ்வரர் ஆலயம் குடமுழுக்கு

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்க கூடிய பிரகதீஸ்வர் ஆலயத்தில் 05 பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு அதாவது இன்று குடமுழுக்கு விழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் பலி, 200 கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அதனால் இந்த வருடம் அதுபோல் அசம்பாவிதம் ஏதும் நேராமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தபட்டுள்ளது.

பெரிய கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை வரும் அனைத்து பயணிகளின் உடைமைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கபடுகின்றனர் .

300 அடி ஏணி

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவுக்காக, 300 அடி உயரமுள்ள ஏணியுடன் கூடிய, அதிநவீன ஹைட்ராலிக் பிளாட்பார்ம் தீயணைப்பு வாகனம், முதன்முறையாக வரவழைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலின் பின்புறம் 11, 900 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து தீயணைப்பு வாகனம்

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்காக பின்லாந்து நாட்டிலிருந்து 17 கோடி ரூபாய் மதிப்பில் இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

யாக சாலை பந்தலில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கூடிய உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

யாகசாலை பூஜை தொடங்கும் நாளில் இருந்து 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக பல சிறப்பு ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புண்ணிய ஆறுகள் புனித நீர் 

கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் புனிதநீர் கொண்டு வரப்பட்டு பெரியகோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புனிதநீர் அனைத்தும் ஒன்றாக கலக்கப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு யாகசாலையில் வைக்கப்படுகிறது.

தமிழக அரசு பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு அதிகஅளவு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துள்ளது.

குடமுழுக்கு இன்று நேரலை

குடமுழுக்கு விழாவை தஞ்சாவூர் சென்று நேராக சென்று காண முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். இதை பல்வேறு தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.

அதேபோல் சமூக வலைதங்கள் மூலமும் நேரடி ஒளிபரப்பு செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here