தஞ்சை பெரிய கோவில்: 23 ஆண்டுகளுக்கு பின் கோலாகல குடமுழுக்கு விழாவிற்கு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் தயாராகி வருகிறது.
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதனால் தஞ்சை முழுவதும் விழாக்கோலமாய் காட்சி அளிக்கிறது.
தஞ்சை பெரிய கோவில்
ராஜராஜ சோழன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, இன்றும் கட்டிடக்கலைக்கு உதாரணமாய் விளங்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா வெற்றிகரமாக நாளை (5ம் தேதி) நடைபெற உள்ளது.
இதையடுத்து தஞ்சை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகிய மின்விளக்குகளால் ஜொலிக்கும் நகரமாக மாறியுள்ளது தஞ்சை.
யாகசாலை பூஜைகள்
கும்பாபிஷேகம் புதன் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்க இருப்பதால் அதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27-ம் தேதி முதலே தொடங்கியது.
11,900 சதுர அடி பரப்பில் 110-யாக குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் 1-ம் தேதி மாலை தொடங்கியது.
வெண்ணாற்றங்கரையில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு யாக சாலையில் வைக்கப்பட்டது. 1-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தினம் நடைபெறும் பூஜை வரும் 5-ம் தேதி காலை 4.30-க்கு முடிவடையும் 8ம் பூஜையாக. பின்னர் 7 மணிக்கு தீபாராதனை மற்றும் 7.25-க்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற உள்ளது.
யாகசாலைக்கான சிறப்பு பொருள்கள்
யாகசாலை பூஜைக்கு என 1000 கிலோ அளவிலான 124 மூலிகைகளும், அபிஷேகத்திற்கான மலர்களும் பயன்படுத்தபட உள்ளன.
தினம் 1000 கிலோ அளவிற்கு செவ்வந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா போன்ற மலர்களும், யாகத்திற்காய் வெள்ளை மிளகு, நன்னாரி வேர், அதிமதுரம், தேவதாரு கட்டை, லவங்கப்பட்டை, ஆடாதோடா, வலம்புரிகாய் போன்ற மூலிகைகளும் பயன்படுத்தப்பட உள்ளது.
வாகன வசதி
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகள் தொடர்ந்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கோவிலுக்குள் 2 சக்கர ஆம்புலன்ஸ் சேவை வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பக்தர்களின் வசதிக்காக.
சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை
கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தஞ்சை – திருச்சி, தஞ்சை – மயிலாடுதுறை, தஞ்சை – திருவாரூர்; 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை காரைக்கால் – தஞ்சை ஆகிய வழித் தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் 4-ம் தேதியிலுருந்து 6-ம் தேதி வரை டெமு ரயில் சேவை இயக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடமுழுக்கு விழாக் குழுவினர்
கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தையும் திருப்பணிக்குழு தலைவர் துரை திருஞானம்; திருப்பணிக்குழு உறுப்பினர்கள் அறிவுடை நம்பி, புண்ணிய மூர்த்தி, சரவணன்; கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா பான்ஸ்லே ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் இவர்களோடு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்
1. பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை செயலாளர் சண்முகம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்திர ரெட்டி, ஏடிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் தினம் ஆய்வு செய்து வருகின்றனர்
2. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொருவரும் தனித்தனியே கண்காணிக்கப்பட உள்ளனர்.
3. பாதுகாப்பு ஏற்பாடுகளில் 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள், ஊர்க் காவல் படையினர், ஆயுதப் பாடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
4. குறைகளை தெரிவிக்க “நம்ம தஞ்சை” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இது கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களோடு தொடர்பு கொண்டு குறைகளை சொல்ல உதவி செய்யும்.
[…] தஞ்சாவூர் நெற்களஞ்சியம் மிகவும் பிரபலம். நன்கு விளைச்சல் பெற்றால் தான் வரி செலுத்தியதுபோக மீதத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும். […]