அமைச்சரவை பரிந்துரையை ஏற்று தன்னை விடுதலை செய்யக்கோரிய நளினி மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் தன்னை சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே விடுதலை செய்து இருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யவில்லை என நளினி உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.
இந்த மனு மீதான விசாரணை சுப்பையா, பொங்கியன் கொண்ட நீதிபதி அமர்வு பல கட்டமாக விசாரணை செய்து வந்தது.
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
நீதி வழங்குதல் பலவேளைகளில் சட்டப்புத்தகங்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மையமாக வைத்தே வழங்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் நிரபராதிகளும் அசந்தர்ப்பவசமாக மாட்டுப்படுவது உண்டு. இதன் பிரதிபலிப்பு பிற்காலத்தில் இறைவனால் கொடுக்கப்படக்கூடிய தண்டனையிலிருந்துதான் தெளிவாகும். இதற்குப் பல உதாரணங்களும் உண்டு. எது எப்படியோ அது அப்படித்தான் நடக்கும்.