விஜய் ஹசாரே பிறந்த தினம் இன்று; வரலாற்றில் இன்று மார்ச் 11 today what special day in world – india – tamil. ஜாம்பவானான ஹசாரே, முதல் இந்திய வெற்றி கேப்டன், கிரிக்கெட் குறிப்புகள் பிராட்மேனை 3 முறை விக்கெட் எடுத்த ஹசாரே சாதனைகள்
ஜாம்பவானான விஜய்
இந்திய கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்கள் இருந்து வந்து உள்ளனர் அதில் மறைந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான விஜய் ஹசாரே பிறந்த நாள் இன்று.
பிரிட்டிஷ் இந்தியாவின் பாம்பே நகரின் சங்கிலி எனும் ஊரில் 1915 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்தவர் தான் இவர்.
1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு பெற்றார்.
1934 – 1958 ஆண்டு முதல்தர போட்டியில் விளையாடி பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
முதல் இந்திய வெற்றி கேப்டன்
இந்திய அணி டெஸ்ட் போட்டி விளையாடி 20 வருடங்கள் கழித்தே முதல் வெற்றியை ரசித்தது. 1951 – 1953 ஆம் ஆண்டு இவர் கேப்டனாக இந்திய அணிக்கு 14 டெஸ்ட் போட்டிகளில் இருந்து வந்துள்ளார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றி இவரது தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் இந்தியா வென்ற ஒரே போட்டியும் அந்த போட்டி மட்டுமே.
1952 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.
வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்து வீச்சாளரான விஜய் ஹசாரே தான் விளையாடிய சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார்.
இவரின் கிரிக்கெட் குறிப்புகள்
இவர் 30 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2192 ரன்களும், சராசரி 48.00, 7 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 164 ரன்கள் எடுத்துள்ளார்.
பந்துவீச்சில் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி, 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து ஒரு இன்னிங்சில் சிறப்பான பந்துவீச்சை வைத்துள்ளார்
238 முதல்தர போட்டிகளில் விளையாடி 18000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். சராசரியாக 58.38,
60 சதங்களும், 73அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 316 ரன்கள் எடுத்துள்ளார்.
பந்துவீச்சில் 595 விக்கெட்டுகளை வீழ்த்தி, 27 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
இவர் கிரிக்கெட் ஜாம்பவானான ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனை மூன்று முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
விஜய் ஹசாரே சாதனைகள்
- முதல் இந்திய பேட்ஸ்மேனாக முதல் தர போட்டியில் ஒரு இன்னிங்சில் 300 ரன்களை எடுத்துள்ளார்.
*இவர்தான் இந்தியாவின் முதல் தர போட்டியில் முதல் இரண்டு முச்சதம் அடித்த வீரர் ஆவார்.
இவரின் முதல் முச்சதம் 1939-40 ஆண்டுகளில் மகாராஷ்டிர அணியில் விளையாடி புனே அணிக்கு எதிராக 314 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது முச்சதம் தி டெஸ்ட் அணியில் விளையாடி தி ஹிந்துஸ் அணிக்கு எதிராக 309 ரன்கள் எடுத்தார். தனது சகோதரர் விஜய் உடன் கூட்டணி அமைத்து 300 ரன்கள் 300 ரன்கள் எடுத்தனர்.
அதில் விஜய் ஹசாரே 266 ரன்கள் எடுத்து அதாவது இவர்களது கூட்டணியில் 88.86 ரன்கள் இவர் மட்டுமே எடுத்தார். அந்த அணியில் இவரது ரன்கள் மட்டும் 79.84 அடுத்து முதல் தர போட்டியில் உலக சாதனையாக இன்றுவரை இருந்து வருகிறது.
- 1947-48 அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து சர்வதேச போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.
-
கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன முதல் இந்திய வீரரும் இவரே.
-
இந்தியா மூன்று தொடர் வெற்றி கண்ட டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.
-
முதல் தர போட்டியில் 50 சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.
-
சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் ஆவார்.
விஜய் ஹசாரே டிராபி
இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் சங்கம் இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக விஜய் ஹசாரே டிராபி என்ற போட்டி வருட வருடம் நடத்தி வருகின்றது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை குறைவால் காலமானார்.
இவர் குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இன்று இவரது 89வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.
#Happybirthday #vijayhazare
வரலாற்றில் இன்று இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history
இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.