பாறைக்கு அடியில் 4000 ஆண்டுகள் பழமையான நடன ஓவியம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜிஞ்சுப்பள்ளியில் பாறைக்கு அடியில் 4000ஆண்டு பழமையான செஞ்சாந்து நடன கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் இதைப் பற்றி கூறும்பொழுது இது ஒரு அறிய வகை ஓவியம்.
இதுவரை அதிகமாக வெண்சாந்து ஓவியங்களே கண்டறியப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய செஞ்சாந்து ஓவியம் ஆகும். ஏறத்தாழ 4000 ஆண்டு பழமையான ஒன்றாகும்.
வட்ட வடிவில் வீடுகளும் அதன் மேல் குச்சி போன்ற பாறைகளும் அதை சுற்றி 200க்கும் மேற்ப்பட்டோர் நடனமாடுவது பொழும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் இவ்வளவு நீண்ட செஞ்சாந்து நடன ஓவியம் கண்டறியப்படவில்லை. இதன் அருகில் 1 கி.மீ. தொலை வில் ஆறு உள்ளதால் இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.



