2.0 டெல்டா மக்களின் துயர் துடைக்கும் படம்!
நேற்று வெளியான 2.0 மூவி அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுவிட்டது. அதே நேரத்தில் டெல்டா மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில், இப்படம் தேவையா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்க்க வேண்டியது முதலில் அவர்களே. விவசாயம் அழிகின்றது என விவசாயியே தன்னை அறியாமல் விவசாயத்தை அழித்துக்கொண்டு உள்ளான்.
கஜா புயல் பாதிப்பு. ஏராளமான மின்கம்பங்கள் சாய்வு. செல்போன் கோபுரங்கள் பிடுங்கி எறியப்பட்டது. 2.0 படமும் செல்போன் கோபுரத்தின் பாதிப்பு பற்றியது தான்.
உங்களுடைய போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்தாமல், செல்போன் கோபுரங்களுக்கு எதிராக மாற்றுங்கள். அடுத்த நொடியே பிரதமரே நேரில் வந்து சந்திக்கும் நிலை உருவாகும்.
உங்கள் ஊரில், செல்போன் கோபுரங்கள் இன்னும் சரிசெய்யப்பட வில்லையெனில், சரி செய்ய அனுமதிக்க வேண்டாம். அது விவசாயத்தை அழிவில் இருந்து மீட்கும் செயல்.
செல்போன் கோபுரம் மட்டும் தான் பாதிப்பா? எனக்கேட்டால் இல்லை. பூச்சிக்கொல்லி மருந்துகளும் ஒருவகை பாதிப்புகளே.
கார்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தத்தில், அரசியல் கட்சிகள் ஆடிப்போகும். உடனே செல்போன்களுக்கு எதிராக போராட்டத்தை தடுக்க, நலத்திட்ட உதவிகள் நொடிப்பொழுதில் வந்து சேரும்.
அதைவிடுத்து, சாப்பாட்டிற்காக வாகனம் பின்பு ஓடி ஓடி தேய்ந்தாலும், உங்களை கண்டுகொள்ள சக தமிழர்களுக்கே நேரமில்லை.