Home நிகழ்வுகள் தமிழகம் தமிழ்நாட்டின் ஊரடங்கால் 1000கிமீ தூரம் தப்பிச்சென்ற 90 மீனவர்கள்

தமிழ்நாட்டின் ஊரடங்கால் 1000கிமீ தூரம் தப்பிச்சென்ற 90 மீனவர்கள்

249
0
1000கிமீ தூரம்

சென்னை: ஊரடங்கால் மீன் பிடிக்க தடை விதித்ததை அடுத்து சென்னையின் காசிமேடு மற்றும் ராயபுரத்தில் தனித்து விடப்பட்ட ஆந்திரா மற்றும் ஒடிசாவை சேர்ந்த 90 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு 1000கிமீ தூரம் கடந்து அவர் அவர் இருப்பிடத்திற்கு சென்றனர்.

துறைமுகம் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ப்பு துறை ஆகியவற்றை நிர்வகிக்கும் சென்னை துறைமுக அதிகாரிகளும் இதை பற்றி தாங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என தெரிவித்தனர்.

கடலோர ரோந்து கப்பல்கள் இவ்வாறு மெதுவாக சென்ற மீனவர்களின் படகுகளை கவனிக்காமல் விட்டு இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் 4 நாட்கள் கடலிலேயே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இழுவிசை படகுகள்

மேலும் மீனவர்கள் இழுவிசை படகுகளையே கையாண்டதாகவும், ரேடாரில் சிக்காமல் இருக்க கடற்கரை ஓரமாகவே பயணித்து தங்களது எல்லைகளுக்கு சென்றதாக தெரிவிக்கபடுகிறது.

மீனவர்கள் 5 இலட்சம் வரை செலவு செய்து பைபர் படகுகளை வாங்கி இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிகிறது.

அவ்வாறு பயணம் செய்த மீனவர்கள் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் நிறுத்தி தேவையான மளிகை பொருட்களை வாங்கியதாவும், எரிபொருள் நிரப்பியதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மனோகரன் என்பவர் படகுகளை பற்றி தெரிவிக்கையில், பைபர் படகுகள், திறந்த நிலை படகுகள் என்றும் இதந்த பயணத்திற்காக இரண்டு வெளிப்புர இயந்திரங்களை பொருத்தியதாகவும், ஒவ்வொரு படகும் ரூ.1.5 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை அதன் தரத்தை பொருத்து மதிப்பீடு உடையவை எனவும் தெரிவித்தார்.

1000கிமீ தூரம் பயணம்

ராஜ்குமார் என்பவர் தெரிவிக்கையில், பொதுவாக 1000 கிமீ கடற் பயணம் மேற்கொள்வது என்பது சாதாரண மனிதர்களுக்கு கடினமானது ஆனால், கடலில் நீரோட்டம் தெரிந்த , கடலை பற்றி அறிந்தவர்களுக்கு சுலபம் தான், மேலும் வானிலை எங்களுக்கு சாதகமாக இருந்தது இன்னும் சுலபமாக இருந்தது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து காவல் துறை தரப்பில், ” அவர்கள் கடலில் சாதாரணமாக உலாவியது போல தெரிந்ததாலும் , சிறிய படகுகளை கையாண்டதாலும், சட்டத்துக்கு புறம்பாக ஏதும் செய்வது போல் தெரியாததாலும் அவர்களை நாங்கள் தடுக்க முனயவில்லை”, என தெரிவித்தனர்.

Previous articleகொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Next articleஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here