சென்னை: ஊரடங்கு அமலில் உள்ளதால் சில நிறுவனங்கள் மட்டும் சென்னையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது அதில் அம்மா உணவகங்களும் ஒன்று, இந்தநிலையில் ஞாயிற்றுகிழமை அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் திருவல்லிகேணியில் உள்ள அம்மா உணவகத்தில் வெகுநாட்களாக பணிபுரிந்து வருபவர் மேலும் இவரின் வயது 52 ஆகும். திருவல்லிகேணி ஏற்கனவே சிகப்பு மண்டலத்தில் இருப்பதாக தெரிகிறது.
அம்மா உணவகம்
“ஞாயிற்றுகிழமை மாலை இந்த செய்தியை கேட்ட பின் நாங்கள் இரண்டு மணி நேரத்திற்குள் ‘கஜபதி லாலா தெரு’வில் இருந்த இந்த அம்மா உணவகத்தை மூடிவிட்டோம். இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த, கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்களையும், இந்த அம்மா உணவகத்தில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதணை செய்யப்படும்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாதவரம் ஆவின் பால் பண்ணை
இதை போன்றே மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆவின் அதிகாரிகள் இந்த நிகழ்விற்கு பிறகு அங்கிருந்து செல்லும் பால் விநியோகத்தை தடுத்து நிருத்தியுள்ளார்கள். ” கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மற்ற பணியாளர்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சென்னையில் பால் விநியோகத்தில் தட்டுபாடு ஏற்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே மோசமாக பாதிக்கப்படும் சென்னையில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.