அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திக் திக் நிமிடங்கள்
ஜல்லிக்கட்டு என்றாலே உலக அளவில் பிரபலமானவை மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர்.
தற்பொழுது, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மொத்தம் 636 காளைகள் களமிறக்கப்பட உள்ளன. 500 மாடுபிடி வீரர்கள் மாடுகளைப் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1000-ற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் குழுவும் அங்கு முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காயமடையும் வீரர்களுக்கு ஒரு குழுவும், கால்நடைகளுக்கு ஒரு மருத்துவக் குழுவும் சிகிச்சை அளித்து வருகின்றது.
உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் மருத்துவமனை கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.
இதுவரை 17 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றது.
ஜல்லிக்கட்டில் மாடுகள் வெளிவரும்போது பார்பவர்களுக்கே பயத்தை உண்டு செய்கின்றது. அந்த அளவிற்கு ஆக்ரோசமாக சீறுகின்றன.