முகிலன் குறித்து தோண்டித் துருவிய சிபிசிஐடி; வெட்ட வெளிச்சமாக்கியது சிசிடிவி காட்சிகள்
ஸ்டெர்லைட் போராட்டக் கலவரம் காவலர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார் முகிலன்.
அன்றைய தினமே மதுரைக்குச் செல்ல சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றார். அதன்பிறகு அவர் மாயமானார்.
முகிலன் ரயில் நிலையத்தை விட்டு வெளியில் செல்லும் சிசிடிவி காட்சி கிடைத்தாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறியது. அவர்கள் தோண்டித் துருவி விசாரணை செய்ததில் அவர் வெளியில் சென்றது உண்மை தான் என முதலில் கண்டறிந்தனர்.
பிறகு அவர் 11 மணி அளவில் மீண்டும் ரயில் நிலையத்திற்குள் வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் ரயில் ஏறிய பின்புதான் மயமாகி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்த முகிலனின் வழக்கில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது அறுதல் அளிக்கிறது.
முகிலனுக்கு என்ன ஆனது என தமிழகமே கூர்ந்து கவனித்து வருகிறது. இது தேர்தல் நேரம் என்பதால் மேலும் இந்த வழக்கு பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.