குளிர் சாதனப் பெட்டி விலை ரூ.200 மட்டுமே. கடந்த ஜனவரி 12, 13-ம் தேதி கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் போகி, பொங்கலை முன்னிட்டு இடமாற்றுக்கடை (Swap Shop) வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சியை நடத்தியது.
இடமாற்றுக்கடை (Swap Shop) விற்பனைக்காக நடத்தப்பட்ட கண்காட்சியில் எதிர்பார்த்ததை விட அனைத்துப் பொருட்களும் விரைவாக விற்றுத் தீர்ந்தது.
இடமாற்றுக்கடை (Swap Shop)
இடமாற்றுக்கடை நோக்கம் புதிய பொருட்களை விற்பது மட்டுமல்ல. வீட்டில் பயன்படுத்தும் நிலையில் பழைய பொருட்கள் இருந்தால் அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே ஆகும்.
பழைய பொருட்கள் வீணாக யாருக்கும் பயன்படாமல் குப்பைக்கு போவதைவிட பிறருக்கு பயன்படும் வகையில் கிடைக்க swap shop உதவுகிறது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள (TNHB ) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் சமுதாய நலக்கூடத்தில் இந்த மாற்றுக் கடை கண்காட்சி நடைபெற்றது.
விற்பனை மற்றும் பரிமாற்றம்
ஆடைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை, கட்டில்கள் மெத்தை, குளிர்சாதனப் பெட்டிகள், நுண்ணலை அடுப்பு (மைக்ரோ ஓவன்) புத்தகங்கள், பாத்திரங்கள், செயற்கை ஆபரண நகைகள், பைகள் மற்றும் பயன்படுத்தும் நிலையில் உள்ள காலணிகளை இம்மையத்திற்குக் கொண்டு வந்து பொருட்களை விற்பனை மற்றும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
மளமளவென விற்பனை
அதிக மக்களின் வருகை காரணமாக கார்ப்பரேஷன் ஊழியர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மண்டபத்தைத் திறக்க வேண்டியிருந்தது.
மேலும், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் விற்கப்பட்டதால் கடையை முன்கூட்டியே மூட வேண்டியிருந்தது.
நாள் முடிவில், சுமார் 1,800 பொருட்கள் ரூபாய் 23,000 விலையில் விற்கப்பட்டன. ஒவ்வொரு பொருளும் சராசரியாக 12.75 விலையில் விற்கப்பட்டன.
விலை நிர்ணயம்
நாங்கள் விலையைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. பழைய பயன்படுத்தப்படாத பொருட்களைச் சேகரிப்பதில் எங்களுக்கு உதவிய குடியிருப்பாளர்கள் நலச்சங்கங்களின் தொண்டர்களையே விலையை நிர்ணயிக்க அனுமதித்தோம்.
தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் வாய்ப்பாகக் கருதாமல் பயன்படுத்தும் நிலையில் உள்ள பொருட்கள் பிறருக்குப் பயன்படும்.
இந்த நோக்கத்திலேயே பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று வட்டாரத் துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகப் பிரச்சாரம் செய்தோம். அதன் முடிவில் சிறு சிறு பொருள்கள் முதல் வீட்டு அலங்காரங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் வரை சேகரித்தோம் என கோட்டூர்புரத்தில் சேகரிப்பு இயக்கத்தை ஒருங்கிணைத்த உதவிப் பொறியாளர் ஒருவர் கூறினார்.
குளிர் சாதனப் பெட்டி விலை
நல்ல நிலையில் உள்ள ஒரு குளிர்சாதனப் பெட்டி (AC) ரூபாய் 200-க்கும் மைக்ரோவேவ் ஓவென் ரூபாய் 100-க்கும் விற்கப்பட்டது.
சைக்கிள், இசைக் கருவிகள், இடமாற்று கடையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இதேபோன்ற இடமாற்றுக் கடை வளசரவாக்கத்தில் நடைபெறும்.
Very useful and economical also innovative move for ordinary people. Keep it up