Home சினிமா கோலிவுட் Upcoming Tamil Movies 2020 | Most Awaited – ஒரு கண்ணோட்டம்

Upcoming Tamil Movies 2020 | Most Awaited – ஒரு கண்ணோட்டம்

518
1
Most Awaited 2020 Most Awaited 2020 தமிழ் படங்கள்

Upcoming Tamil Movies 2020 | Most Awaited 2020. இவ்வருடம் வெளிவர உள்ள அதிகம் எதிர்பார்ப்புடைய ஆறு தமிழ் படங்கள் (Tamil Movies) பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்.

தலைவர் 168 அல்லது ரஜினி 168

Thalaivar 168 or Rajini 168: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சிறுத்தை சிவா கூட்டணி என்றதுமே சமுகவலைதலங்களில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஆரம்பித்து விட்டது .

அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் போன்றோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இமான் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தர்பார் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

 

இந்தியன்-2 (Indian 2 Tamil Movie Release Date) 

Indian 2 Tamil Movie Release Date

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் இரண்டாவது முறையாக இப்படத்திற்காக இணைகிறார்கள்.

ஏற்கனவே இவர்களிருவரும் இணைந்த இந்தியன் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியன் படத்தின் நீட்சியாகத்தான் இப்படமும் இருக்கும்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல் அவர்களின் இறுதிப்படமாக இப்படமிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதாலும், சங்கர் அவர்களின் படம் என்பதற்காகவுமே எதிர்பார்ப்பு விண்ணை முட்டிக்கொண்டு நிற்கிறது .

மாஸ்டர் (Master Upcoming Tamil Movie 2020)

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் அவர்களும் கைதியின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அவர்களும் இணைந்திருக்கும் படம் மாஸ்டர்.

விஜய் சரி சொல்கிற அளவிற்கு லோகேஷ் என்ன கதை சொல்லியிருப்பார் என்ற ஆவலும் இப்படத்தை பற்றி எழுந்துள்ளது.

படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு என பெரிதாய் நீண்டு கொண்டிருக்கும் நடிகர் பட்டாளம் ஏற்படுத்தியிருக்கிற எதிர்பார்ப்பும் சமூகவலைதளங்களில் பிரம்மாண்டமாய் பிரதிபலித்து கொண்டிருக்கிறது.

இப்படத்தின் மூலம் அனிருத் ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை (Valimai Upcoming Tamil Movie 2020)

அஜித் ‘நேர்க்கொண்ட பார்வை’க்கு பிறகு தனது வழக்கமான பாணியுடன் திரும்புவார் என்று ஆவலில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

படத்தைப் பற்றிய தகவல்கள் இன்னும் முழுவதுமாக வெளியாகாத நிலையில் மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

H.வினோத் மற்றும் அஜித்குமார் அவர்கள் இரண்டாவது முறையாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப்போற்று (Soorarai Pottru Most Awaited Tamil Movie)

சூர்யா போன்ற முன்னனி கதாநாயகர் ஒரு பெண் இயக்குனர் படத்தில் நடிக்கிறார் என்பதே அவ்வளவு ஆரோக்கியமான சினிமா சூழலாகவும் அதேசமயம் படத்தை திரையில் பார்ப்பதற்கான ஆவலும் ஓங்கியுள்ளது.

இறுதிச்சுற்று எனும் மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு சுதா கொங்கரா அவர்கள் இயக்கும் இப்படத்திற்கு ‘சூரரைப்போற்று’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜி.வி பிராகாஷ்குமார் அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மீப்பெறும் நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறது.

கோப்ரா (Cobra Tamil Movie 2020)

Cobra Tamil Movie 2020

சியான் விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது  இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிருக்கிறது.

D40 (தனுஷ் 40 or Dhanush 40)

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைந்து மிரட்ட காத்திருக்கிறார்கள். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசை அமைக்கிறார். லண்டனில் தான் பெரும்பான்மையான படப்பிடிப்பு காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு கேங்ஸ்டர் படம் என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இவையாவும் இவ்வருடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் படங்கள்.

Previous articleTamilViewers.com: ஸ்ரீகாந்த் குறிப்பிடுவது யாரை? #staraikelungal
Next articleகுளிர் சாதனப் பெட்டி விலை ரூ.200 மட்டுமே Swap Shop

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here