Home நிகழ்வுகள் தமிழகம் தமிழ்நாடு போலீஸ் மாஸ்; சிங்கம் பட பாணியில் சம்பவம்

தமிழ்நாடு போலீஸ் மாஸ்; சிங்கம் பட பாணியில் சம்பவம்

947
0
தமிழ்நாடு போலீஸ்
ஷானிகுமார்(26)

தமிழ்நாடு போலீஸ் மாஸ்; சிங்கம் பட பாணியில் சம்பவம்

ஆவடியில் 5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையை 8 மணி நேரத்தில் மீட்ட தமிழ்நாடு போலீஸ். வடக்கானுக்கு நெல்லையில் வைத்த செக்மேட்.

சென்னை ஆவடியில் வசிக்கும் மத்திய பிரதேச  ராதேஷ் ஷியாம் (28)-ராக்கி(25)  தம்பதியருக்கு ராத்திகா(4), அத்தீஷ் பிரஜாபதி(2), 6 மாதமே ஆன அமீத் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ராதேஸின் முன்னாள் நண்பரான ஷானிகுமார்(26) என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தமிழகம் வந்து ராதேஷ் ஷியாம் வீட்டிலேயே தங்கி அவரது உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் அத்திஷ் பிரஜாபதி குழந்தை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்துச் சென்று அப்படியே கடத்தி சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து ராதேஷ்க்கு போன் செய்து 5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். உடனே ராதேஷ் போலீசிடம் தகவல் தெரிவித்தார்.

ஷானிகுமார் மொபைல் போனை ட்ராக் செய்து அவர் ரயிலில் செல்வது முதல் தனியார் விடுதி சென்றது வரை கணித்து அவரை ஆந்திர மாநில நெல்லையில் வைத்து குழந்தையுடன் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here