Home நிகழ்வுகள் தமிழகம் சென்னையில் தொடர்ந்து உயரும் கொரோனா எண்ணிக்கை

சென்னையில் தொடர்ந்து உயரும் கொரோனா எண்ணிக்கை

292
0
சென்னையில் தொடர்ந்து உயரும் கொரோனா எண்ணிக்கை

சென்னையில் தொடர்ந்து உயரும் கொரோனா எண்ணிக்கை,  கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 138 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு: கொரோனா நோயின் தீவிரம் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று 161 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை:

சென்னையில் இன்று பதிவான இந்த 138 என்ற எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பதிவான அதிகப்படியான எண்ணிக்கை ஆகும். இதில் 2-மாத குழந்தையும் அடங்கும்.

கோயம்பேடு மார்க்கெட்டில் 38 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பதட்டத்தை அதிகரிக்கிறது. சென்னை தொடர்ந்து 3-வது நாளாக 100-ஐ தாண்டியுள்ளது கொரோனா தொற்றின் எண்ணிக்கை.

தமிழ்நாட்டில் 1, 258 பேர் இதுவரை குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பதால்,  தமிழ்நாட்டில் நோய் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இறப்புகள் எண்ணிக்கை

வியாழன் நிலவரப்படி,  புதிய இறப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

மாவட்ட வாரியான நிலவரம்

தமழ்நாட்டில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களில், 37 மாவட்டங்களில் தொற்றிற்கு உள்ளாகி உள்ளன. இதில் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக, புதிதாக பதிவான நோய் தொற்றுகள் எண்ணிக்கை, சென்னை 138, செங்கல்பட்டு 5, திருவள்ளூர் 1, மதுரை 5, ராணிப்பேட்டை 1, காஞ்சிபுரம் 3,

சேலம் 1, கடலூர் 1, ராமநாதபுரம் 3, பெரம்பலூர் 2, அரியலூர் 1 என்ற எண்ணிக்கையில் உள்ளது. 98% பேருக்கு அறிகுறிகள் தெரியாமலே கொரோனா தொற்று பரவுகிறது.

மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

முதன் முதலில் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மதம் 7-ம் தேதி தான் பதிவாகியது. இத்தனைத் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்ததால் மார்ச் 25 முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றினை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், இந்த தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு என்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

மக்கள் அரசுக்கு முழுவதுமாக ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொடரிலிருந்து தமிழ்நாடு முழுமையாக விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்பதே உண்மை. வீட்டிலிருப்போம்! தனித்திருப்போம்!

Previous article130 சிகப்பு மாவட்டங்கள்: சல்லடை போட்டு சலித்த சுகாதார அமைச்சகம்
Next articleகொரோனா மனிதர்களால் உருவாக்கப்படவில்லை அமெரிக்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here