Home நிகழ்வுகள் தமிழகம் தலை தனியாக உடல் தனியாக வீசி சிறுவன் படுகொலை

தலை தனியாக உடல் தனியாக வீசி சிறுவன் படுகொலை

3439
0
தலை தனியாக நகுலன் சிறுவன் படுகொலை

தலை தனியாக உடல் தனியாக வீசி 6 வயது சிறுவனை எட்டையபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் படுகொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி: எட்டையபுரம் அருகே உள்ள வடக்கு முத்தலாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ஜெய்சங்கர். இவருடைய மகன் நகுலனை (வயது 6) நேற்று மாலை முதல் காணவில்லை.

சிறுவன் நகுலன் துவக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை காணவில்லை.

Promo Video

இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அருண்குமார் என்பவர் நகுலனை அழைத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

சிறுவன் படுகொலை

உடனே அருண்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். சிறுவனை படுகொலை செய்ததை அருண்குமார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை சிறுவன் கொலை செய்யப்பட்ட இடத்தைக் காண்பிக்க அருண்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர் போலீசார்.

சிறுவனை படுகொலை செய்து தலை தனியாக, உடல் தனியாக வேறுவேறு இடங்களில் அருண்குமார் வீசியது தெரியவந்தது.

பெற்றோர் சாலை மறியல்

சிறுவனின் உடலைக் கைபற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெற்றோரிடம் இத்தகவலை போலீசார் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.

கொலையாளியை தப்பிக்க வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும்; சிறுவன் நகுலனின் உடலை, உடனே காண்பிக்க வேண்டும் எனவும்; பெற்றோரும், பொதுமக்களும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சமரசம்

இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் காண்பித்து போராட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டான் எனத் தெரியவில்லை.

அருண்குமாரிடம் சிறுவனை கொலை செய்த காரணத்தை தெரிந்துகொள்ள தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

Previous articleமருத்துவமனை அலட்சியம்: 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலி
Next articleபுத்தாண்டு தினம்: தேனியில் படுகொலை, சாலை மறியல்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here