சென்னை: ஜூன் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு தேர்வு கொரோனா ஊரடங்கினால் இரண்டு வாரங்கள் மேலும் தள்ளிவைக்கப்பட்டது. செவ்வாய் கிழமை ஜுன் 15 முதல் 25 வரை 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் அதிருப்தி
ஆனால் கல்வியாளர்கள் அரசின் இந்த முடிவுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர்கள் கொரோனா ஊரடங்கு பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு மற்றும் தேர்விற்கு தயார் ஆவதற்கும் இன்னும் அதிக நாட்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தேர்வுகள் வைத்தால் 9.5 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
5 கி.மீ சுற்றளவிற்குள் தேர்வு மையம்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவிக்கையில் கொரோனா பிரச்சனை சரியான பின்பு பள்ளி திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும். “மாணவர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் சென்று தேர்வு எழுதும் வகையில் 3,825 யிலிருந்து 12,690 ஆக தேர்வு மையங்களின் எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டுள்ளது,” எனவும் தெரிவித்தார்.
தள்ளி வைக்கப்பட்ட 11ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 16இல் நடைபெறும். 12ஆம் வகுப்பு இறுதி தேர்விற்கு வராமல் போனவர்களுக்கான மறுதேர்வு ஜூன் 18இல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.