சென்னை: தமிழக அரசு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச அரிசியை அனைத்து குடும்ப அட்டை தாரர்களும் இருமடங்காக வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தது. இதை தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவதாக தெரிவித்தது.
கொரோனா வைரஸ்ஸால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலை காரணமாக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் அரிசி
எப்பொழுதும் வழங்கப்படும் அரிசியின் அளவுடன், அனைத்து குடும்ப அட்டைதாரரும் குடும்பத்தின் ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் மொத்தம் 2.01 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முன்னுரிமை உள்ளவர்கள்(PHH) என்ற வகையில் 1.15 கோடி அட்டைதாரர்கள் மற்றும் முன்னுரிமை இல்லாத அட்டைதாரர்கள்(NPHH)மொத்தம் 86 இலட்சம் பேர் உள்ளனர்.
அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளானது என்னவென்றால் எந்த குடும்ப அட்டைதாரரும் அரசு குறிப்ட்ட அளவைவிட குறைவாக பெறாமல் பார்த்துகொள்வதே ஆகும் என திங்கட்கழமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக 4 பேர் கொண்ட குடும்பம் 20 கிலோ அரிசியை ஒரு மாதத்திற்கு பெறுகிறது என்றால், வரும் ஜுன் மாதம் வரை அக்குடும்பம் 40கிலோவாக பெற்றுகொள்ளலாம்.