Home Latest News Tamil தமிழ்நாட்டின் கொரோனா தொற்று 35000ஐ நெருங்கியது, இறந்தோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு

தமிழ்நாட்டின் கொரோனா தொற்று 35000ஐ நெருங்கியது, இறந்தோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு

தமிழ்நாட்டின் கொரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டின் கொரோனா தொற்று 35000ஐ நெருங்கியது. செவ்வாய் கிழமை 1,685 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன மற்றும் இன்று மட்டும் 21 பேர் கொரோனாவால் இறந்தனர். மாநிலத்தின் கொரோனாவால் இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 307 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 1,242 கொரோனா தொற்று

சென்னையில் மட்டும் 1,242 கொரோனா தொற்றுகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 36 பேருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 158 தொற்றுகளும், திருவள்ளூரில் 90 தொற்றுகள் மற்றும் காஞ்சிபுரத்தில் 32 தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மதுரை, திருவண்ணாமலை மற்றும் வேலூரில் தலா 16 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் தலா 10 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன மற்றும் மற்ற 18 மாவட்டங்களில் ஓர் இலக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here