Home நிகழ்வுகள் தமிழகம் தமிழ்நாடு கொரோனா செய்திகள்: திருச்சியில் 6 கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு

தமிழ்நாடு கொரோனா செய்திகள்: திருச்சியில் 6 கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு

கட்டுப்பாட்டு மண்டலங்களில்

திருச்சி: செவ்வாய்கிழமை, திருச்சி மாநகரத்தில் இந்த 6 கட்டுபாட்டு மண்டலங்களும் 28 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டிருந்தது. இங்கு புதிதாக எந்த கொரோனா பாதிப்பும் வராததால் இந்த 6 கட்டுப்பாட்டு மண்டலங்களில் இப்போது கொரோனா ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

வீடுகளின் அமைவிடத்தை பொருத்து கட்டுபாட்டு மண்டலங்கள்

ஏப்ரல் 5 ந்திலிருந்து திருச்சி மாநகரத்தில் 14 கட்டுபாட்டு மண்டலங்கள் கொரோனா பாதிப்பாளர்களின் வீடுகளின் அமைவிடத்தை பொருத்து உருவாக்கப்பட்டன.

இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் வெளியாட்கள் உள்ளே வருவதும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

28 நாட்கள் ஊரடங்கு முடிந்த பின், மாநகராட்சி 3 கட்டுபாட்டு மண்டலங்களுக்கான ஊரடங்கை நீக்கியுள்ளது, கே அபிசேகபுரம் மற்றும் பொன்மலை மண்டலங்களில் தலா ஒரு கட்டுபாட்டு மண்டலங்களுக்கான ஊரடங்கை நீக்கியுள்ளது.

கொரோனா அறிகுறி இருந்தால் தெரிவிக்க வேண்டும்

மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தொற்றுக்காண அறிகுறி ஏதும் இருந்தால் விரைவாக தெரிவிக்கும் படி குடியிருப்பவர்களை அறிவுறுத்தி உள்ளது.

இதேபோன்று 6 கிராமப்புர கட்டுபாட்டு மண்டலங்களான மணப்பாறை, மணச்சநல்லூர் மற்றும் லால்குடி பகுதிகளிலும் மற்றும் தூவாகுடி நகராட்சியில் ஒரு கட்டுபாட்டு மண்டலத்திலும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் சில கட்டுபாட்டு பகுதிகளில் ஊரடங்கிற்கு தளர்வு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது