சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்விதுறை 12 பேர் கொண்ட நிபுனர் குழுவை அமைத்தது. இந்த குழுவிற்கு பள்ளி கல்விதுறை ஆணையர் சிகி தாமஸ் வைத்யன் தலைமை வகிப்பார் எனவும் இக்குழு கொரோனாவினால் பள்ளிகளுக்கு ஏற்பட்ட விடுமுறை காலத்தை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்குழுவில் பள்ளி கல்விதுறை, தொடக்க கல்வி துறை, தேர்வு துறை, மெட்ரிக் பள்ளிகள் மற்றும் கல்வி தொலைக்காட்சியின் பிரதிநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், தமிழ்நாடு அரசின் மின்னனு சேவை(TNeGA) மையம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஆகியவற்றின் இயக்குனர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
தொழில்நுட்பம் கொண்டு தடையில்லா கல்வி
“இக்குழு பாடம் நடத்துதல் மற்றும் கல்வி கற்றல் ஆகியவற்றில் உள்ள இடைவெளி குறித்து ஆராய்ந்து அதை சரிசெய்வதற்காக ஆன்லைன் வகுப்புகள் போன்ற தொழில்நுட்பங்களை பயண்படுத்தி பள்ளி குழந்தைகளுக்கு தடையில்லா கல்வியை வழங்க ஒரு செயல்திட்டத்தை வகுக்கும்,” என பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் அரசாணையில் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு 15 நாட்களுக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்த குழுவிடம் கேட்டு கொண்டது.
பள்ளிகள் ஏற்கனவே 30 வேலைநாட்கள் வரை சென்ற கல்வியாண்டு செயல்படவில்லை கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தால் வரவிருக்கும் கல்வியாண்டும் குறிப்பிட்ட வாரங்கள் வேலைநாட்களை இழக்க நேரிடும்.