சீனாவில் உருவான கொரோனா நோய் 100 நாடுகளுக்கு மேல் பரவி தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது.
ஆகையால் மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாடு சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் பல விமானங்களும், வெளிநாட்டு விமானங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்தி விரட்டி அடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கைகள் எடுத்துவருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தொடர்புத்துறை மூலம் அறிக்கையை வெளியிட்டுள்ளது .
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தியின் 216.
கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேச மாநில எல்லைகளில் இணைக்கும் சாலைகள் கீழ் குறிப்பிட்டுள்ள வாகன போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக நாளை முதல் 31ம் தேதி புள்ளி 3புள்ளி 2020 வரை மூடப்படுகிறது.
இந்த சாலைகளில் கீழ்கண்ட வாகனங்கள் மட்டும் தமிழ்நாடு அனுமதிக்கும்.
- அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்கள்.
-
இதர சரக்கு வாகனங்கள்.
-
தவிர்க்க இயலாத காரணங்களான இழப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்.
-
பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்
எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் வாகனங்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.
நாட்டின் நலன் கருதி பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
ஆக பொதுமக்கள் சில நாட்களுக்கு கொரோனா நோயிலிருந்து தப்பிக்க மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதே தவிர்ப்பது நல்லது. நாமே நம்மைக் காப்பாற்றிக் கொண்டால் மட்டுமே தான் இந்த நோயிலிருந்து தப்பிக்க முடியும்