சென்னை: சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் முழு ஊரடங்கை ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 9 மணி வரை அமல்படுத்தப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் , இந்த முழு ஊரடங்கை ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 மாலை 6 மணி வரை கடைபிடிக்கப்படும். மிகவும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதி வழங்கப்படும், என முதல் அமைச்சர் அறிவிப்பில் தெரிவித்து இருந்தார்.
மொத்த வியாபாரிகள், நடமாடும் காய்கறிகடைகள்
கோயம்பேடு மொத்த வியாபாரக்கடைகள் போன்றவை மட்டும் வழிகாட்டுதல்கள் படிதிறக்க அனுமதி அளிக்கப்படும். அதுபோல், நடமாடும் காய்கறி மற்றும் பழக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் வேற எந்த கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
மருத்துவ சேவைகள்
மருத்துவமனைகள், சோதனைக்கூடங்கள், மருந்து விற்பனையகங்கள் , மருத்துவ ஊர்தி போன்ற மருத்துவ சேவைகள் மற்றும் இறுதி ஊர்வல வாகனம் சேவை ஆகியவை அனுமதிக்கப்படும்.
தேவையான பணியாளர்கள் மட்டும்
தலைமைச் செயலகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, காவல் துறை, வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை , மின்வாரியம், ஆவின் பால், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தண்ணீர் விநியோகத்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் மட்டும் இயங்கும்.
மத்திய அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகம், ஏடிஎம் இயங்கும்
அம்மா உணவகங்கள் மற்றும் ஏடிஎம்(ATM) ஆகியவை எப்பொழுதும் போல் இயங்கும்.
உணவகங்கள் தொலைபேசியில் மூலம் கேட்பப்படும் உணவுகளை மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படும்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களை பராமரிப்பு செய்ய உதவியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மற்ற நிறுவனங்கள்
தானியங்கி நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள் உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று இயங்கும்.
“இவைகளைத்தவிர மற்ற அனைத்து வித செயல்பாடுகளுக்கும் தடை”, என முதல் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் மற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பதிவுத்துறை ஆகியவை இயங்காது. தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் எதுவும் செயல்படாது.
மற்ற பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கே பின்பற்றபடும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள்
மேலும் முதல்வர் தெரிவிக்கையில் பிற கட்டுப்பாட்டு பகுதிகளில் மிகுந்த கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும், மற்ற மாநகராட்சிகளில் கிருமி நாசினிகள் ஒர் நாளில் இரு முறை தெளிக்கப்படும் மற்றும் மக்கள் நடமாட்டம் மற்ற பகுதிகளில் தடைசெய்யப்படும்.
இந்த கட்டுபாடுகளை மீறுபவர்களின் வாகனங்கள் பரிமுதல் செய்யப்படுவது மட்டும் இல்லாமல் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களிடம் வேண்டுகோள்
கொரோனா பரவல் எளிதாக தொற்றக்கூடியதாக உள்ளதால், மக்களின் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என முதல் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.