சென்னை: சாத்தாங்குளம் தந்தை மகன் இறப்பு சம்பவம் இந்திய அளவில் சமூக வளைதளங்களில் வெள்ளிக்கிழமை அனைவராலும் பேசப்பட்டது. #JusticeForJayarajanandBennicks என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. கொரோனா காலத்தில் காவல் துறையின் இந்த கொடூரத் தாக்குதல் குறித்து பொதுமக்கள் அதிருப்தி.
காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை
மாநில அரசு இச்சம்பவத்திற்கு பொருப்பானவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.
#JusticeForJayarajanandBennicks
#JusticeForJayarajanandBennicks என்னும் ஹாஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. மேலும் இது உலக அளவில் முதல் 30 டிரெண்டிங்கில் வந்துள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கருத்து
சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த சம்பவம் குறித்து விவாதித்து வருகின்றனர்.
இந்த சாத்தான் குளம் சம்பவம் அமெரிக்காவில் ஜியார்ஜ் ஃப்லோய்ட் என்பவர் காவல் துறையால் கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.