தேனி E.புதுக்கோட்டை ராஜ் என்பவர் சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஆள்நடமாட்டம் உள்ள கடைத்தெருவில் வைத்து தாக்கப்பட்டார்.
தாக்குதலின் பின்னணி என்ன?
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே E.புதுக்கோட்டை ஊரைச் சேர்ந்த ராஜ் காதல் திருமணம் செய்து கொண்டதால் தாக்கப்பட்டார்.
வீடியோ செய்தியை பார்க்க யுட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
காதல் திருமணம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள E.புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதுள்ள அய்யனார் மகன் சேகர்.
இவருடைய மகள் காயத்திரி (24 வயது) அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ் மகன் ராஜ் (24 வயது) என்பவரைக் காதலித்து வந்தார் .
பெற்றோர் அனுமதி இல்லை
காயத்திரி-ராஜ் காதல் ஜோடியின் திருமணம் 2019 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று பெற்றோர்களுடைய சம்மதமில்லாமல் நடந்தது.
அன்று முதல் காயத்திரியின் பெற்றோர் மாப்பிள்ளை ராஜ் மீது விரோதத்தில் இருந்துள்ளனர். மகளுடன் முற்றிலும் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டனர்.
தாக்குதல் நடத்திய பெண் வீட்டார்
இந்நிலையில் இன்று ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனியார் மளிகைக் கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது ராஜ்-யை, அய்யனார் மகன் சேகர் (காயத்திரியின் தந்தை), சேகர் மகன் பிரகாஷ் (வயது 26), ராஜேஷ் (வயது 24) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
மூவரும் கடையில் நின்று இருந்த ராஜ்-யை அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த எதிர்பாராத தாக்குதலைக் கண்டவுடன் ராஜ் பயங்கரமாக சத்தம் கொடுத்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் வருவதைக் கண்டவுடன் அங்கிருந்து மூவரும் தப்பி ஓடிவிட்டார்கள்.
போலீசார் விசாரணை
தாக்குதலில் காயம் பட்ட ராஜ்-யை 108 வாகனத்தின் மூலமாக அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் பற்றி பெரியகுளம் காவல்துறை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
பெரியகுளம் பகுதியில் புதுவருடப்பிறப்பு அன்று கொலை நடந்ததையடுத்து ஆட்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இச்சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் உண்டாக்கி இருக்கிறது.