மதுரை: முறைகேடுகள் காரணமாக திண்டுக்கல்லில் பதினோரு மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திண்டுக்கல் பகுதியில் சில மருந்துக்கடைகள் தகுந்த மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியகத்திற்கு தகவல் வந்தது.
இதை அடுத்து மருத்துவ ஆய்வாளர்களின் குழு பழனி, திண்டுக்கல், செம்பட்டி மற்றும் வேடசந்தூர் போன்ற பகுதிகளில் இருந்த மருந்து கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
உரிமம் நிறுத்தம்
அதன் பிறகு சுமார் 11 கடைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தனர். பழனியில் 7 கடைகளுக்கும், செம்பட்டியில் 2 கடைகளுக்கும், திண்டுக்கல் மற்றும் வெடசந்தூர் பகுதிகளில் தலா 1 கடைக்கும் ஆக மொத்தம் 11 கடைகளின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.
சமூக விலகல் கடைபிடிப்பு இல்லை
இந்த மருந்துகடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும், அறுவை சிகிச்சை செய்வதில் யண்படும் ஸ்பிரிட் எனும் இரசாயனம் அதிக அளவில் விற்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சில முறைகேடுகள் இந்த மருந்து கடைகளில் நடைபெற்று இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம். விஜயலெட்சுமி தெரிவித்தார்.