தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது தமிழக மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
சென்னை: தமிழக நகரங்களில் வசிப்பவர்களை, கடும் வெய்யில் வாட்டி வரும் நிலையில், தேனி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இன்று (செவ்வாய்) மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் மழை
இந்த வருடம் கோடை மழை அதிகம் பெய்திருக்காத நிலையில், இந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும் மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டிய சில இடங்களில்
வெப்ப சலனத்தால் மழை பெய்து வருகிறது, இது மேலும் சில தினங்களுக்கு சில மாவட்டங்களில் தொடரும்”, எனவும் ,
இன்று தமிழகத்தின் விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில்
லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரனமாக வரும் வாரங்களில்
வெய்யிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் எனவும் வாநிலை ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த செய்தி கொரோனாவல் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் தமிழக மக்களுக்கு சற்று ஆருதல் அளிப்பது போல் உள்ளது .