Home Latest News Tamil அம்மா உணவகங்களில் இனி சாப்பாடு இலவசம் – எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பு

அம்மா உணவகங்களில் இனி சாப்பாடு இலவசம் – எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பு

399
0
அம்மா உணவகங்களில் இனி சாப்பாடு இலவசம் - எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பு

அம்மா உணவகம் : கொரோனாவினால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டினை சரிசெய்ய இனி அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மத்திய அரசினால் போடப்பட்ட ஊரடங்கினால் நாடு முழுவதும் பல இடங்களில் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டினை போக்கவே ரேஷனில் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களின் அளவுகளை கூட்டியதோடு மட்டுமல்லாமல் அதனை இலவசமாகவும் வழங்கிவருகிறது.

தமிழ்நாடெங்கும் இருக்கும் அம்மா உணவகங்கள் இந்த மாதிரியான இக்கட்டான காலகட்டங்களிலும் சேவைபுரியும் என்றும் கூறியுள்ளது.

அதன்படி பலர் அம்மா உணவகங்களிலும், ரேஷன் பொருள்கள் மூலமும் பயனடைந்து வந்தனர்.

தற்போது சேலம் மக்களுக்கு உதவும் விதமாக மேலும் ஒரு அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இனி உணவு இலவசம் என்றும், அதற்கான செலவை சேலம் மாநகர் மற்றும் புறநகர் அதிமுக ஏற்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிரடி அறிவிப்பினை பலர் பாராட்டி வருகின்றனர்.

Previous articleஏற்கனவே கதை திருட்டு: இதுல நஷ்டம் வேறயா? ஹீரோவுக்கு வந்த சிக்கல்!
Next articleநாளை முதல் இவையெல்லாம் இயங்கும் – பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here