Home நிகழ்வுகள் தமிழகம் கௌசல்யா சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது போல!

கௌசல்யா சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது போல!

718
0
கௌசல்யா சும்மா

கௌசல்யா சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது போல!

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை மூலம் தமிழகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்ட பெண் கௌசல்யா.

பெற்றோரையே தூக்குமேடைக்குத் துணிந்து ஏற்றினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இப்படி துணிச்சல் மிக்கவர் எனப் பெயரெடுத்தவர் கௌசல்யா.

ஆனால், அதன்பின்பு அவரது வாழ்க்கை பலதிசைகளில் வழிமாறிச் சென்றுகொண்டே இருக்கிறது.

இவர் சக்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட உடனேயே இவரது பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டது.

அதன்பிறகு சக்தியின் லீலைகள் தெரியவர கௌசல்யாவிற்கு வெளியில் தலைகாட்டக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

தற்பொழுது அவர் பார்த்துக்கொண்டு இருந்த மத்திய ஆரசு வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியராக இருப்பதை எப்படி உணர்கிறீர்? என பிரபல இணையதள கேட்ட கேள்விக்கு அரசை விமர்சித்து கருத்துக்கூறி இருந்தார்.

கௌசல்யா கூறியதாவது, “அம்பேத்கர் இந்தியாவை நாடு எனக் கருதவில்லை. யூனியனாகவே கருதினார். இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அப்படிதான் உள்ளது.

தேசிய மொழி என எந்த மொழியும் அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ்நாடு ஒரு அடிமை மாநிலமாகவே நடத்தப்படுகிறது.

ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் போன்ற திட்டங்களை தமிழ்நாட்டு நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என எதற்குமே மோடி அரசு செவி சாய்க்கவில்லை. எனவே நான் இந்தியாவை ஏற்கவில்லை எனக் கூறினார்.

கௌசல்யா, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்த சர்சைக்கு உரிய கருத்தால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசாங்கப் பதவியில் உள்ளபோது அரசு விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அதை மீறியதால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

Previous articleபாகிஸ்தான் பிரதமரை அம்மணமாக்கிய அமெரிக்கா – கர்மா 2
Next article4 முரட்டு ஹீரோயின்கள்; தெறிக்கவிட்ட தேவரகொண்டா!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here