மதுரை: 6 வருடங்களுக்கு முன் ஒரு தம்பதிகளால் சட்ட விரோதமாக தத்தெடுக்கப்பட்ட 8 வயது சிறுவன் தற்போது மதுரையின் ஒரு மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் நலவாரியம் மற்றும் காவல்துறை நடவடிக்கை
குழந்தைகள் நலவாரியத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த நவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
குழந்தைகளுக்கான உதவி மையம் புகாரை ஏற்று நடவடிக்கை
சட்டவிரோதமாக ஒரு பையன் கைது செய்யப்பட்டுள்ளதாக குழந்தைகளுக்கான உதவி மையத்தின் தொலைபேசி எண்ணான 1098 டிற்கு, திங்கள் கிழமை காலை தகவல் வந்தது.
இதை அடுத்து குழந்தைகள் நல வாரியத்தினர், குழந்தைகளுக்கான உதவி மைய அதிகாரிகள் மற்றும் செக்கானுரனி காவலர்கள் ஆகியோர் ஐயம்பட்டி கிராமத்தை அடைந்தனர்.
கருபசாமி மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர் அந்த குழந்தையை தத்தெடுத்திருந்தனர். இவர்கள் கூடை பின்னும் தொழில் செய்து வந்துள்ளனர்.
செக்கானுரனி என்னும் இடத்தில் இருந்து தத்தெடுத்த தம்பதி
கிளிந்த துணியுடன் இருந்த பையனை இரண்டரை வயதில் அந்த தம்பதிகள் செக்கானுரனி என்னும் இடத்தில் இருந்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
இவர்களுகு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் ஆண் குழந்தை இல்லாததால் இந்த குழந்தையை எடுத்து வளர்த்துள்ளனர்.
திருடியதற்காக ஏற்படுத்த பட்ட தீக்காயம்
குழந்தைகள் நல வாரியத்தின் உறுப்பினர் பி.பாண்டியராஜன் தெரிவிக்கையில், அந்த பையனின் இடது முன் கையில் தீக்காயம் உள்ளது எனவும். ஆரம்பத்தில் ஒரு விபத்தில் ஏற்பட்ட காயத்தால் வந்த காயன் என தெரிவித்த தம்பதியினர், பிறகு ₹.200 திருடியதற்காக தங்களால் ஏற்படுத்த பட்ட தீக்காயம் என ஒப்புக்கொண்டனர். இது சட்டத்துக்கு புறம்பான செயல் என அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
இதை அடுத்து பி.பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் செக்கானுரனி காவலர்கள் அந்த தம்பதியினர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2015இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இனி அந்த குழந்தை காப்பகத்தில் சேர்கப்படும் மற்றும் பள்ளியில் சேர்கப்படும் என பாண்டியராஜன் தெரிவித்தார்.