ஜெயலலிதா குற்றவாளியா? – குமாரசாமிக்கு அடுத்து நச் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்!
மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் கட்டத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டிகுன்ஹா 2015 ஆண்டு விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதா குற்றவாளி எனவும் ரூ.100 கோடி அபராதம் விதித்து 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கினார்.
அடுத்த சில மாதங்களிலேயே இந்த வழக்கின் மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
மீண்டும் சி.பி.ஐ. மூலம் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு ஜெயலலிதா 2016 டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
அவர் காலமான சில மாதங்களிலேயே, சசிகலா முதலமைச்சராக ஏற்பாடுகள் நடந்தன. அதற்குள் மீண்டும் அதே வழக்கில் ஜெயலலிதா உட்பட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்பொழுது, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழகஅரசு தீர்மானித்தது. அதை எதிர்த்து ரவி என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, அரசுப் பணத்தில் நினைவிடம் அமைக்கக்கூடாது என வழக்குத் தொடுத்தார்.
இந்த வாழ்க்கை சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையிலான அமர்வு, விசாரித்து வந்தனர். இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.
ஜெயலலிதா குற்றவாளியா? தீர்ப்பு விவரம் பின்வருமாறு,
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டபோது, அதற்கு எதிரான மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.
எனவே, ஜெயலிதாவை குற்றவாளி எனக் கருதமுடியாது. மேலும் தீர்ப்பு வருவதற்கு முன்பாக அவர் இறந்துவிட்டார். இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
இந்த வழக்கில் ஓவ்வொரு முறையும், நேர்எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.