காணும் பொங்கல்: பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மெரினா பீச் மற்றும் வண்டலூர் பூங்கா ஆகிய இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்
மெரினா பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
அதிலும் குறிப்பாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்க 20க்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 8மணி முதல் மாலை 6மணி வரை நுழைவுச் சீட்டு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வசதி
பொதுமக்கள் இணையத்திலும் தங்கள் நுழைவுச் சீட்டை பதிவு செய்து கொள்ளலாம். www.aazp.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
vandaloor zoo என்ற செயலியையும் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமும் கட்டணத்தை செலுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வாகன வசதிகள்
பார்வையாளர்கள் அனைவரும் தங்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை கேளம்பாக்கம் சாலையில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்காவிற்கு செல்ல இலவச சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: பார்வையாளர்கள் அங்கிருக்கும் விலங்குகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கத் தடைசெய்யப்பட்டுள்ளது. சிகரெட், மது, ஆயுதங்கள், பிளாஸ்டிக் போன்றவை எடுத்துச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.