இன்னும் கள்ளிப்பால் ஒழியவிலையா? தொடரும் சோகம். உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்து உள்ளனர் பெற்றோர்கள்.
பச்சிளம் குழந்தையை களிப்பால் ஊற்றி கொன்ற தாய். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலால் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் வைரமுருகன்-சௌமியா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மாதம் பெண்குழந்தை ஒன்று பிறந்தது.
அந்த பெண் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் திடிரென இறந்துவிட்டது எனக்கூறி வீட்டின் அருகிலேயே அந்தக் குழந்தையை புதைத்து உள்ளனர்.
இதனால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுந்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருடன் வந்த கிராம நிர்வாக அதிகாரி குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடற்பறிசோதனை செய்து பார்த்தனர்.
இதில் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனவே பெற்றோரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.