ஏசியா நெட், மீடியா ஒன் சேனல்கள் தடை நீக்கம். 48 மணி நேரம் இந்த சேனல்கள் தடை செய்யவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தடை நீக்கப்பட்டு உள்ளது.
டெல்லி கலவரத்தை நடத்தியது ஆர்எஸ்எஸ் தான் என ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிட்டதாக கூறி ஏசியா நெட் நியூஸ், மீடியா ஒன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது.
நாடு முழுவதும் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டிவிட்டரில் ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆகியது. பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த இரு சேனல்கள் மீது இருந்த தடையை நீக்கி உள்ளதாக இந்திய தகவல் தொழில்நுட்ப பிரிவு கூறியுள்ளது.