Home நிகழ்வுகள் தமிழகம் பொள்ளாச்சி ரேப்பிஸ்ட் பற்றி காசி வெளியிட்ட வீடியோ: அப்படித்தான் செய்வோம் நாங்க

பொள்ளாச்சி ரேப்பிஸ்ட் பற்றி காசி வெளியிட்ட வீடியோ: அப்படித்தான் செய்வோம் நாங்க

0
10853
பொள்ளாச்சி ரேப்பிஸ்ட் kaasi video

பொள்ளாச்சி ரேப்பிஸ்ட் பற்றி காசி வெளியிட்ட வீடியோ(காசி வீடியோ (nagarcoil kaasi video): அப்படித்தான் செய்வோம் நாங்க, பொண்ணுங்க ரொம்ப யோக்கியமா என்கிற பாணியில் காசி வெளியிட்ட வீடியோ

நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான காசி என்ற இளைஞர் பள்ளி மாணவிகள் முதல் பெண் டாக்டர் வரை நாடகக் காதல் செய்து ஏமாற்றியுள்ளார்.

பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளான் இந்த காசி. அவரிடம் பழகி எடுத்த அந்தரங்க படங்களை வைத்து பெண் மருத்துவரை மிரட்டி வந்துள்ளான்.

அதில் பயந்த அவர் கேட்கும்போதெல்லாம் பணம் என 5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அவர் போலீஸிடம் புகார் அளித்து விட்டார்.

இதனால் காசி தற்பொழுது லாக்கப்பில் லாடம் கட்டப்பட்டு ஸ்டேசனில் கம்பி எண்ணிக்கொண்டு உள்ளான்.

பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது அந்த கும்பலுக்கு ஆதரவாக காசி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளான். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி கும்பல் அதிமுக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் காசி பாஜக கட்சியைச் சேர்ந்தவன் என்பது அவனது பேஸ்புக் பதிவு மூலம் உறுதியாகி உள்ளது.

காசியும், பாஜக கட்சியின் பவரை பயன்படுத்தி தவறாக நடந்துகொண்டாரா என்கிற பாணியிலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி ரேபிஸ்ட் பற்றி காசி பேசியதாவது,

“அப்பப்பா எங்க பாத்தாலும் பொள்ளாச்சி ரேப்பிஸ்ட்.. பொண்ணுங்க எல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிட்டு இருக்கீங்க, பெர்பெக்ட்டா இருக்குற மாதிரி.

வாய்ப்ப நீங்களே உருவாக்கி கொடுத்துட்டு அம்மா போச்சு.. அப்பா போசுனுன்னா எப்டி திரும்பி வரும்? வீட்டுல வளத்த கன்னுக்குட்டி ரோட்டுக்கு தான் போவேன்னா ரோட்டுல போற லாரி அடிபட்டு சாகத்தான் செய்யும்” என காசி அந்த வீடியோவில் பேசி உள்ளான்.

காசி வீடியோ (nagarcoil kaasi video)

காசிக்கு வந்த நல்ல நேரம் தமிழகத்தில் தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இந்த பிரச்சனை அரசியலாகப்படவில்லை. போராட்டங்களும் பெரிய அளவில் வெடிக்கவில்லை.

இருப்பினும் காசியால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியாமாக வெளியில் வந்து சொன்னால் மட்டும் தான் முழு உண்மையும் வெளியில் தெரிய வரும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here