கோவையில் குண்டு வீச்சு கலாச்சாரம் அரங்கேறி வருகிறது. இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. கோவை வடகிழக்கு டெல்லியாக மாறிவிட்டதா?
கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராடுவோர்கள் மாறிமாறி சண்டை போட்டு சேதங்களை உண்டாக்கி வருகின்றனர்.
மதுக்கரை ஒன்றியச்செயலாளர் ஆனந்தன் மீது கடந்த வாரம் மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தினர்.
அதே தினத்தின் ஆட்டோவில் பயணித்த இஸ்லாமியர்கள் மீது அடிதடி நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கணபதி அருகிலுள்ள பள்ளி வாசல் மீதும் பெட்ரோல் குண்டு வீசினர். ஆனந்தன் மீதான தாக்குதலுக்கு கடந்த 7-ஆம் தேதி கோவையில் சில இடங்களில் கடை அடைப்பை நடத்தினர்.
அதே தினத்தில் இஸ்லாமியர்களும் கடை அடைப்பை நடத்தினர். இவ்வாறு இரு தரப்பினர் இடையே பிரச்சனை வலுத்துக்கொண்டு இருந்தது.
கடந்த 8-ஆம் தேதி வி.ஹெச்.பி பிரமுகர், 9-ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர், பி.ஜே.பி அமைப்பு சாரா தொழிற்சங்கத் தலைவர் கார்த்தியின் ஆட்டோ அடுத்தடுத்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர்.
மேலும் இந்து முன்னணி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் எஸ்.டி.பி.ஐ கட்சி கோவை மாவட்டச் செயலாளர் இக்பால் மீது மர்மநபர்கள் இன்று மதியம் தாக்கியுள்ளனர்.
இந்த தொடர் தாக்குதலால் இந்து முஸ்லிம் தரப்பினரிடம் போராட்டங்கள் வலுத்தன. இதனால் கோவையில் பதற்றம் அதிகரித்தது.
போலீஸ் துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறியதாவது
தனிமனிதர்கள் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல், தங்களது பணிகளைத் தொடரலாம்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு காவல்துறை மூலம் தீர்வு காண்பதே சரியான வழி. மத ரீதியாகப் பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இதனிடையே கோவையில் பாதுகாப்பு பணியில் 1000க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.