கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகில் உள்ள நல்லூரைச் சேர்ந்த 67 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
இரண்டு மாதங்கள் கழித்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரிக்கு திரும்பி உள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ரகசியமாக மாநில எல்லையை கடந்துள்ளார்.
ஊருக்குள் வந்த நான்கு நாட்களில் கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுவரை பச்சை மண்டலமாக இருந்து வந்த கிருஷ்ணகிரி பகுதியில் இன்னும் சில நாட்களில் 50 சதவீதம் ஊரடங்கு உத்தரவை திரும்பபெறலாம் என ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் கிருஷ்ணகிரி அரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது.
மேலும் உரிய அனுமதி இல்லாமல் மாவட்டத்திற்குள் நுழைந்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.