லாக்டவுன்21: lockdown காரணம் இல்லாமல் வெளியில் வந்த பெண்ணை கண்டித்த போலீசை காட்டுமிராண்டி தனமாக கடித்த பெண். ரத்தத்தை உறிஞ்சி துப்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் lockdown 21 நாட்கள் வீட்டைவிட்டு வெளியில் வரத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநில எல்லைகள் மாவட்ட எல்லைகள் எல்லாம் அடைக்கப்பட்டு உள்ளன.
இதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மக்கள் உணவு தட்டுபாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையிலும் ஒரு சில அரைவேக்காடுகள் ஊர் சுற்றுவதிலும், ஜோடியாக வலம் வருவதிலும் குறிக்கோளாக உள்ளனர்.
இதனை கண்டிக்கும் காவலர்களைத் தாக்கவும் செய்கின்றனர். கொல்கத்தாவில் காவலர் ஒருவரை தாக்கிய பெண்ணின் வீடியோ இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காவலரை கடித்த பெண்
பேலிகுஞ்ஜேவிலிருந்து நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆண் நண்பர் ஒருவருடன் சால்ட் லேக் பகுதிக்கு பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவரை தடுத்த காவலர்கள் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்து உள்ளது. அதற்கு அந்த பெண் மருந்து வாங்கச் செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.
உடனே காவலர் மருந்து சீட்டை காட்ட வலியுறுத்தி உள்ளார். ஆனால் அப்பெண் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
உடனே அப்பெண் காரைவிட்டு இறங்கி அந்த போலீசாரை லபக் என விழுந்து கடித்துள்ளார். மேலும் அப்பெண் அவரின் கையில் ஏற்கனவே இருந்த காயத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி போலீசார் சட்டையில் துப்பி உள்ளார்.
தன்னை அடித்து துன்புறுத்தியதாக வழக்கு தொடர்வேன் என போலீசாரையும் மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் சில அரைவேக்காடுகள் எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கனிகா கபூர் போன்ற சில அரைவேக்காடுகள் தங்களுக்கு கொரோனா இல்லை என நினைத்துக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளாமல் இந்தியா முழுவதும் பரப்பிவிட்டு உள்ளனர்.
இவர்களை போன்றவர்களால் தான் இந்தியா இந்த அளவு மோசமான நிலைக்கு சென்று உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கூட சில நகரங்களில் மட்டுமே கொரோனா பரவியது. ஆனால் இங்கு இந்தியா முழுவதும் கொரோனா பரவி உள்ளது. இது எந்த அளவிற்கு இந்தியர்கள் சுயநலமாக இருக்கின்றனர் என்பதற்கான உதாரணம்.