திருநெல்வேலியில் செல்போன் சுவிட்ச்ஆப்; கொரோனாவை பரப்பிய மலையாளி. கொரோனா பாதித்த ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் புகுந்துள்ளார்.
கொரோனாவை பரப்பிய மலையாளி
நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில், காய்ச்சல் அறிகுறியுடன் அஜீஸ் என்பவர் வந்துள்ளார். கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்து உள்ளனர்.
அவரை கொரோனா பிரிவிற்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் அந்த நபர் மருத்துவர்கள் கூறுவதை நம்பவில்லை.
தனக்கு சாதாரண காய்சல் தான் உள்ளது; வேண்டும் என்றே கொரோனா பீதியை கிளப்புவதாக நினைத்த அந்த நபர், நேராக அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
கண்மூடி திறப்பதற்குள் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். கேரளாவில் இருந்தால் எப்படியும் பிடித்து விடுவார்கள் என நினைத்த அந்த நபர் தமிழகத்திற்குள் நுழைந்து உள்ளார்.
மருத்துவமனை வந்த அந்த நபர் கொடுத்த முகவரி மற்றும் செல்போன் எண்ணை ட்ராக் செய்ததில் போன் நாகர்கோவில்-திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் பயணித்தது தெரியவந்துள்ளது.
திருநெல்வேலியை நெருங்கிய சமயத்தில் போன் எண் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அவர் நேராக மதுரை சென்றாரா? சென்னை சென்றாரா? அல்லது திருநெல்வேலியிலேயே இறங்கிவிட்டாரா எனத் தெளிவாக தெரியவில்லை.
இந்த செய்தி நேற்று கேரளா ஊடங்கங்கள் பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பி உள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் இது குறித்து காவல் துறை விழிப்புடன் செயல்படவில்லை.
கேரளா பேருந்துகளை முறையாக சோதனை செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. அவருக்கு கொரோனா இருப்பது 100% உறுதியாகவில்லை.
இருப்பினும் பொதுமக்கள் முகம் தெரியாத நபர்களிடம் நெருங்கிப் பேசுவதை தவிர்க்கவும். கேரளா, கர்நாடகா எல்லையில் வசிப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
2000 பேருக்கு கொரோனா பரப்பிய பெண்
சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ஐடி ஊழியரின் மனைவி கொரோனா தொற்றுடன் டெல்லி வரை சென்று 2000 மேற்பட்ட நபர்களிடம் கொரோனாவை பரப்பியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்கள் கூறுவதை சற்று நம்பிக்கையுடன் கடைபிடியுங்கள். உங்களுக்கு உண்மையில் கொரோனா தொற்று இருந்து அது மற்றவர்களுக்கு பரவிடக்கூடாது என்ற மனநிலையில் உறுதியாக இருங்கள்.
நமக்கு வந்தது எல்லோருக்கும் வரட்டும் என்ற மனநிலையில் இருந்தால், நிச்சயம் இந்த நாடே அழியும் அபாயம் உருவாகும்.