Home ஆன்மிகம் இணையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

இணையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

329
0
இணையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

இணையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மதுரை: தமிழ்நாட்டில் கோவில் நகரமான மதுரையில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் திருக்கோவில். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கெடுப்பது வழக்கம்.

குறிப்பாக பெண்கள் இந்த திருக்கல்யாண நிகழ்வில் அதிகம் பங்கேற்பார்கள். அன்னை மீனாட்சிக்கு திருமணம் நடைபெறும் வேளையில் பெண்களும் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்துகொள்வார்.

தங்கள் கணவர் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் எனவும் வேண்டிக்கொள்வர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் கோவில்களுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் கோவில் நிர்வாகம்,  மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்வை பக்தர்களுக்கு நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்தது.

பெண்கள் இந்நிகழ்வை தாங்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தரிசித்து மங்கலநாண் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.  திருக்கல்யாண விருந்தை பக்தர்கள் வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இந்நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பானது. இதற்கான முன்னறிவிப்பு ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் பத்தர்கள் தங்கள் வீடுகளிலேயே இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நேரத்தில் பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே தங்களது மங்கலநாணை மாற்றிக்கொண்டதோடு மீனாட்சி அம்மனின் தரிசனத்தையும் நேரலை வாயிலாகவே கண்டு வேண்டுதல்களை முன்னெடுத்தனர்.

அதேபோல் திருக்கல்யாண நிகழ்வின்போது வழக்கமாக கோவிலில் எவ்வாறு விருந்து பரிமாறப்படுமோ, அதே போன்று பக்தர்களும் தங்கள் வீடுகளிலேயே வடை, பாயாசத்துடன் ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு தாங்களும் உண்பர்.

நாம் தேடி செல்ல முடியாத தருணத்திலும் அருள்மிகு மீனாட்சி அம்மன் நம்மை தேடி நம் வீடுகளுக்கே வந்து நமக்கு அருள்பாளித்திருப்பது, அன்னை என்றும் நமக்கு துணையாக வருவாள் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here