Home சினிமா கோலிவுட் நடிகை இதெல்லாம் பண்ணக்கூடாதா? புகுந்து விளையாடிய ரகுல் ப்ரீத்தி சிங்

நடிகை இதெல்லாம் பண்ணக்கூடாதா? புகுந்து விளையாடிய ரகுல் ப்ரீத்தி சிங்

1332
0
ரகுல் ப்ரீத்தி சிங்

நடிகை என்றால் தங்களுக்குள் அதற்குள் ஒரு வட்டம் போட்டு வாழ்வார்கள். ஆனால் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் அப்படியில்லை. சகோதரருடன் பழைய விளையாட்டுகளை விளையாடியுள்ளார்.

இன்றைய நவீன காலகட்டத்தில் தான் கையடக்க மொபைலில் இந்த உலகமே அடங்கிவிட்டது. 90-களுக்கு முன்புவரை இதெல்லாம் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது.

விளையாட்டு என்றாலே வீட்டை விட்டு வெளியில் வந்து கும்பலாக ஒன்று கூடி ஆரவரமுடன் ஓடி ஆடி விளையாடும் காலம் அது.

ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை அந்த பிஞ்சு கால்கள் ஊரை சுற்றி சுற்றி வந்து விளையாடும் வசந்த காலம் அது.

அந்த சுகம் 90-களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் விளையாடும் விளையாட்டிற்கு பெயரே வித்தியாசமாகத் தான் இருக்கும்.

கிச்சுக்கிச்சு தாம்பாலம், ஒழிப்பான், தாப்புலான் குச்சி, பம்பரம், கோலி, கிட்டி, சீத்தாங்கல், கட்டாங்கல், கபடி, கோகோ, பல்லாங்குழி, பச்சக்குதிரை, எத்தான், பாண்டி, திருடன் போலீஸ், டிக்டிக், ஒத்தையா ரெட்டையா, தாயம், நுங்கு வண்டி, பனை ஓலை காற்றாடி என இப்படி விதவிதமாக அடிக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்திலோ ஒரு மொபைல் அதற்குள் ஒரே மாதிரி விளையாட்டு விதவிதமான பெயர்களில் இருக்கும்.

இருந்த இடத்தில் அசையாமல் கொள்ளாமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியபடி விளையாடுவது மட்டும் தான் இந்தக்கால குழந்தைகள் செயல்.

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங், சிறு குழந்தையாய் இருக்கும்போது விளையாடிய விளையாட்டுகளை மறவாமல் மீண்டும் விளையாடி குழந்தை பருவத்திற்கே சென்றுவிட்டார்.

ஏன் நடிகை என்றால் இதெல்லாம் பண்ணக்கூடாது என்று ஒன்றும் சட்டம் இல்லையே? மற்ற நடிகைகளும் தங்களில் இளமை பருவ வாழ்க்கையை மறவாமல் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here