நாகர்கோவில் பேருந்து நிலையத்தை அதிர வைத்த ஒரு பெண், 5 இளைஞர்கள்
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் திடீரென ஒரு பெண் 5 இளைஞர்களுடன் நடனமாடினர். கானா பாலாவின் பாட்டு ஒலிக்க, படுபயங்கரமாய் குத்தாட்டம் நிகழ்ந்தது.
அங்கு பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. திடீரென அங்கு நடனம் அரங்கேறியதால், கூட்டம் கூடிவிட்டது.
பின்பு தான் விஷயம் தெரிந்தது. அது சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவிற்காக காவல்துறை சார்பில் ஏற்படுத்திய நிகழ்ச்சி என்பது.
பொதுமக்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க கானா பாடலுடன் நிகழ்வைத் துவங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 30-தாவது சாலைப் பாதுகாப்பு வார விழா 10-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டே நேற்று நாகர்கோவில் பேருந்துநிலையத்தில் இந்த நிழ்ச்சியைப் போலீசார் நடத்தியுள்ளனர்.
ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதின் அவசியம், சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
எப்படி பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது? என்பது குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விளக்கமளித்தனர்.