இந்தியாவிலேயே அதிக ஆண்டு சிறையிலிருந்த என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நளினி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக முருகன்-நளினி தம்பதிகள் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர்.
நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் உள்ளார். இந்தியாவிலேயே அதிக நாள் சிறையில் இருந்த நபராக நளினி மாறியுள்ளார்.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும் உரிமை தமிழக ஆளுநருக்கு உண்டு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டது.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
சிறையில் ஏழுபேரும் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தும் எந்த ஒரு பலனும் இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் செவிசாய்க்கவில்லை.
இதனால் நளினி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் 7 பேரையும் விடுதலை செய்து நற்பெயர் பெறலாம் என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.