விமானத்தைக் கடத்தப்போவதாக அச்சுறுத்தல்
ஏர் இந்திய விமான நிறுவனத்துக்கு, இன்று ஒரு போன் கால் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர் விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் நாட்டிற்கு இன்னும் சில மணி நேரத்தில் கடத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் விமானங்கள் புறப்படும் முன் 8 வித பாதுகாப்பு விஷயங்களை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விமான நிலையத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது. வாகனங்களை தீவிரமாகச் சோதனை செய்யவேண்டும்.
நுழைவு வாயிலிலேயே அனைத்து பயணிகளையும் நன்கு சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.
ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.