கள்ளச்சாராயம் : திருச்சியில் ஒரு வயதான பாட்டி, கபசுர குடிநீர் என்று கூறி போலீசாரை ஏமாத்தி, டீ கேனில் கள்ளச்சாராயத்தினை விற்ற சம்பவம் நடந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக நிலவிவரும் மது தட்டுப்பாட்டில், நாடு முழுவதும் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.
எப்படி காய்ச்சுவது என்று தெரியாத பலர், டிக்டொக்கில் வந்த வீடியோ பார்த்து காய்ச்ச தொடங்குகின்றனர்.
இப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கடுமையான முறையில் போலீசார் கண்டித்து வந்தாலும், போலீசார் கண்களிலேயே மண்ணைத்தூவும் சம்பவமும் நடக்கிறது.
அப்படி திருச்சியில் ஒரு வயதான பாட்டி, கபசுர குடிநீர் என்று கூறி டீ கேனில் கள்ளச்சாராயத்தினை விற்றுள்ளார்.
நூதன முறையில் போலீசாரை ஏமாத்திய அந்த பாட்டியினை கையும் களவுமாக போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சியது என்று தேடி, அவர்களையும் கைது செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் இந்த ஊரடங்கில் நாடு முழுவதும் பல இடங்களில் இப்படியான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.