கெல்மெட் வடிவில் மாணவிகள்; உலக சாதனை முயற்சி
30-தாவது சாலைப் பாதுகாப்பு வார விழா, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரிசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மகளிருக்கான தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது மாபெரும் உலகசாதனை நிகழ்ச்சியாக மாறியது.
பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் அமைந்துள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியில், 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றுகூடி, கெல்மெட் வடிவில் அணிவகுத்து நின்றனர்.
சேலம் மாவட்ட காவல் ஆணையர் சங்கர், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தை வேலு ஆகிய இருவரும் இந்த சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இருசக்கர வாகனங்கள் வைத்துள்ள பெண்கள் அவசியம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி சதீஷ், போக்குவரத்து காவல் அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.