ராஜ்பவனில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு!
சென்னையில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.
முதல்வர் பழனிச்சாமி, விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்தார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிலை திறந்தவைத்து பழனிச்சாமி பேசியதாவது, 1893ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில், விவேகானந்தர் நிகழ்த்திய உரையே அவரை உலகப்புகழ் பெறச் செய்தது.
நம் நாட்டின் சமய கொள்கைகளை அன்றே உலகுக்கு எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பங்கேற்க காரணம் தமிழ் மன்னர்.
சிகாகோ உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை விவேகனந்தருக்கு அளித்தவர் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி.
உலகிற்கு இந்து மதத்தின் புகழைப் பரப்பியபின், இலங்கை வழியாக 1897-ல் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துக்கல் பகுதிக்கு வந்தார் விவேகானந்தர்.
அப்போது தடபுடலாக வரவேற்பு அளித்தார் மன்னர் பாஸ்கர சேதுபதி. அப்போது விவேகானந்தர், தன்னை உலகறிந்த ஞானியாக மாற்றிய சேதுபதி மன்னரை பாராட்டினர். இவ்வாறு பழனிச்சாமி பேசிமுடித்தார்.